ஒரு ஷாப்கீப்பரின் ஆரம்ப சம்பளம் ரூ.9,000. ஒரு டீக்கடையில் வேலை பார்க்கும் ஹெல்பர் சிறுவனுக்கு நாளொன்று ரூ 400 … ஆக மாத ரூ.12,000

என் தம்பியுடன் படித்தவன் படிப்பைத் தொடரமுடியாமல் சென்னையில் ஒரு டீக்கடையில் வேலை பார்க்கிறான். ஒரு நாள் என்னிடம் என் சம்பளத்தை கேட்டுவிட்டு நல்லவேளை மாமா நான் சிவில் இன்ஜினியரிங் படிக்கல என்று பெருமிதம் கொள்கிறான் அவனுக்குச் சம்பளம் ரூ 12000. சாப்பாடு ரூம் வசதியுடன். சிவில் இன்ஜினியர்களுக்கு ஏன் இந்த நிலைமை இதற்கு யார் காரணம்?

மார்க்கெட் இருக்கும் கட்டிட பொறியாளர்கள் ஒரு கோடி மதிப்புள்ள ப்ராஜெக்ட்டை போட்டியின் காரணமாக 75 லட்சத்திற்கு கட்டி முடிக்கிறேன் என்று தவறான வாக்குறுதிகொடுப்பது மூலம் முதலில் அந்தக் கட்டிட பொறியாளர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் அதன் பின்னர் அவர் சார்ந்த ஏனைய தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர் கடைசியில் வீட்டு ஓனரிடம் பொறியாளர்களின் எண்ணம் தரக்குறைவாக நினைக்கதோன்ற காரணமாகிவிடுகிறது. இதனால் நல்ல திறமையான பொறியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் ஒரு கோடி ரூபாய் ப்ராஜெக்ட் ஒரு கோடி ரூபாயில் தான் முடிக்க முடியும். ஆகையால் அதை மீறி எடுக்கும் பட்சத்தில் மேற்கண்ட பாதிப்புகள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கொத்தனார்-Rs.1100 to 1300, ஹெல்பர் (M.C)Rs.-800 to 1000, சித்தாள் Rs.-700 to 750, ப்ளம்பர் Rs.-1100, கார்பெண்டர் Rs.-1050, பெயிண்டர் Rs.-1100பொருளாதார அடிப்படையில் மற்றும் விலைவாசி அடிப்படையிலும் இவர்களின் கூலி ஏறுகிறது.பொறியாளர்களின் கதிமட்டும் இப்படி ஏன்!!”
சிவில் சைட்இன்ஜினியர் மாதச் சம்பளம் Rs.8000, CAT, ஒரு நாளைக்கு Rs.266. ஆக, ஒரு கொத்தனாரின் சம்பளம் வாங்க குறைந்த பட்சம் நான்காண்டு காத்திருக்க வேண்டும். எதன்அடிப்படையில்இந்தஊதியநிர்ணயம்? அந்த 8 ஆயிரம் என்பதும் ஓரளவு மனசாட்சி உள்ளவர்கள் தந்தால் தான் உண்டு. 7ஆயிரத்துக்கெல்லாம் வேலை பார்க்கவும் B.E பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர் நமது தமிழகத்தில். தின கூலிக்கு நிர்ணயம் உள்ளது ஆனால் கட்டிட பொறியாளர்களுக்கான அரசு ஊதிய நிர்ணயம் செய்தது என்ன? வேலை கற்று கொள்ள வேண்டுமென்கிறார்கள். பிறகு எதற்கு நான்காண்டு தொழில்நுட்ப கல்வி. புத்தகம் தேர்வுக்குப் பயன்படுத்த மட்டுமா?.

நான் படித்த பாடத் திட்டத்தில் எந்த இடத்திலும் ஒரு கன மீட்டருக்கு 500 செங்கல் ஆகும் என்று படித்ததில்லை. ஒரு கொத்தனார் நாளொன்றுக்கு 750 செங்கல் பயன்படுத்தியிருக்க வேண்டுமெனச் சொல்லவில்லை. ஆக எங்களுக்கு வேலை தெரியாதது யார்குற்றம்? இந்தக் கல்விமுறை… முன்னோக்கி ஓடும் எங்கள் மூளையை ஓட விடாமல் கயிறுக் கட்டி இழுக்கிறது. முயல் போன்ற மூளையை ஆமையாக்குகிறது என்பது
நிதர்சனம். O.T பார்க்கும்தொழிலாழிக்கு கூலி உண்டு. சைட் இன்ஜினியருக்கு? உடனே எனக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் தந்தார்கள் தெரியுமா என்று சீனியர் கேட்பார்கள். நீங்கள் வந்தபோது சென்னையில் ரூம் மாத வாடகை எவ்வளவு? ஒருஇட்லியின்விலைஎன்ன? அப்படியும் உங்களுக்குக் கம்மியாகக் கொடுத்திருந்தால் எதற்கு அடிபணிந்தாய்? அன்று நீங்கள் அடி பணிந்தீர்கள் என்பதற்காகத்தானே எங்களையும் அடி பணியச் சொல்கிறார்கள்? அடி மாட்டு விலைக்கு அடிமையாக்கப்படுகிறோம் என்பதை உணராமல் பலரும் அடிமையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அட்ஜஸ்மெண்ட் என்பது எங்கள் தலைமுறையில் குறைந்து வருகிறது.அதே அளவுத் திறமைகள் கூடிவருகிறது. ஆக ஒரு புதிய இன்ஜினியருக்கான அடிப்படை மாத சம்பளம் Rs.12000 வேண்டும். இன்ஜினியரிங் படித்தால் ஒன்று பணக்காரனாக இருக்க வேண்டும் இல்லையெனில் சிபாரிசு செய்யப் பின்பலம் இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது…. சில திறமையுள்ள இன்ஜினியர்கள் படித்து முடித்து வெளிநாடு செல்கிறார்கள். பல திறமையான உண்மையான பொறியாளர்களுக்கு வேலைகிடைப்பதில்லை. மாறாக இங்கு உள்ள அடிமட்ட போலி பொறியாளர்கள் கட்டிய பில்டிங் இடிந்துவிழுகிறது…

தினகூலியை விடக் கேவலமான ஊதியத்தில் இன்று நாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே இன்றைய காலகட்டத்தில் நிதர்சனமான உண்மையாகும்.





