சூரிய ஒளியும், காற்றும், மழையும் உலகிற்கு பொதுவானவை. அவை நல்லவர், தீயவர், ஆண், பெண் போன்ற பேதங்கள் பார்ப்பதில்லை. நாம்தான் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். தேவையானவற்றை தேவையானபடி பயன்படுத்தாவிட்டால் அவை நன்மையை தவிர்த்து கெடுதலையே விளைவிக்கும்.

அதுபோலவே வாஸ்தும் இயற்கையை நமக்கு சாதகமாக மற்றும் ஒரு கலையே அதை முறையாக நாம் பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நாம் வளத்தை இழந்து கெடுதல்களையே சந்திக்க நேரிடும்.

வீட்டின் தரைதளத்தை நாம் எப்படி அமைத்தால் அதன் பலன்கள் எப்படி அமையும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
- மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும்.
- கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கி விடும் அல்லது தரித்திரம் ஏற்படும்.
- வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும் கண்டங்கள் ஏற்படும்.
- தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.
- ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.
- அக்னி மூலை உயரமாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.

- வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும்.
- கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால் மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.
- கிழக்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி விடும்.
- அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயு மூலையும், வடக்கும் பள்ளமாகவும் இருந்தால் பல வகை லாபங்கள் ஏற்படும்.
- தெற்கும் தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் இருந்தால் அவ்வீட்டில் இருப்பவரை லட்சாதிபதியாக்கி விடும். நீண்ட ஆயுள், சந்ததி விருத்தி ஏற்படும்.

- தென்மேற்கும் (கன்னி) மேற்கும் உயரமாகவும், வடகிழக்கும் (ஈசான்யம்) வடக்கும் பள்ளமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.
- வாயு மூலையும், மேற்கும் உயர்ந்து, அக்னி மூலையும் கிழக்கும் தாழ்ந்து இருந்தாலும் பகைவரையும் துயரத்தையும் ஏற்படுத்தும். தீ அபாயங்களை ஏற்படுத்தும்.
- வடக்கும், வடமேற்கும் உயர்ந்து, தெற்கும், அக்னி மூலையும் பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்ட கால வியாதிகள் தோன்றும்.
- வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும் தென்மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், தீய நடவடிக்கையில் ஈடுபடுத்தி விடும். சிறைத் தண்டனை கிடைக்க நேரிடும்.
- கிழக்கும், ஈசான்யமும் உயரமாகவும், மேற்கும், தென்மேற்கும், பள்ளமாகவும் இருந்தால் சந்ததி விருத்தி கிடையாது. இருந்தாலும், நோய்களில் ஆழ்த்தி விடும்.
- கன்னி மூலை, வாயு மூலை மற்றும் ஈசான்ய மூலை மூன்றும் உயரமாகவும் அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், தீ விபத்தினால் பல இழப்புகள் ஏற்படும். கொடுமையான பலன்கள் கொடுக்கும்.
- மேற்கும், கன்னி மூலை, அக்னி மூலையும் உயரமாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால் தரித்திரராவார். நோய்களை எற்படுத்தும்.
- ஈசான்யத் திசையும், அக்னி மூலையும், கன்னி மூலையும் உயரமாகவும், மேற்கு வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால் மிகத் தீய பலன்களை ஏற்படுத்தும்.
- அக்னி மூலை உயர்ந்தும், கன்னிமூலை, ஈசான்யம், வாயு மூலை ஆகியவை பள்ளமாகவும் இருந்தால், வீட்டில் உள்ளோருக்குப் பக்கவாதம் ஏற்படும். குடும்பத்திற்கே அழிவு உண்டாகலாம்.

- கன்னி மூலை உயர்ந்து மற்ற அனைத்து மூலைகள், திசைகள் பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியும், குடும்ப அமைதியும் ஏற்படும். பல நன்மைகள் ஏற்படும்.
மேலே சொன்ன பலன்கள் பொதுவானவை. அந்தந்த இடங்களின் அமைப்பு குறிப்பிட்ட பலன்களை ஏற்படுத்த வல்லவை.
எனவே மனையில் கட்டடம் அமைக்கும்போது, மேற்கண்டவாறு அதிர்ஷ்டம் அளிக்கும்படி, திசைகளையும், மூலைகளையும் அமைத்துச் செல்வ வளங்கள் பெற்றிடுவீர்.
மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தால் கட்டிடத்திற்கு பாதிப்பு வருமா?வராதா?
மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க அனைவரும் விரும்புவர். ஆனால் கட்டிடத்திற்கு பாதிப்பு வருமா? என்ற அச்சமும் அனைவரிடமும் உள்ளது. இதற்கான தெளிவான விளக்கம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
முதலில் மாடித்தோட்டம் அமைக்கும் முறை குறித்து பார்போம்.
மாடித்தோட்டம் அமைக்க தரமான விதைகள், வளர் ஊடகம் (growing media), வளர்க்கும் பைகள்(grow bags), வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள தண்ணீர் தேங்காத இடம் தேவை.
தரமான விதைகளை சூடோமோனாஸ் (உயிர் உரம்) லேசாக தூவி அல்லது பஞ்சகவ்யம் கலந்த நீரில் ஊற வைத்து நடும்பொழுது நோய் தாக்குதல் இல்லாமல் விதைகள் செழிப்பாக முளைக்கும். கீரை போன்ற சிறிய விதைகளை வேப்பம் புண்ணாக்கு கலந்து தூவ வேண்டும். பெரிய விதைகளை (கொடி வகைகள்) 24 மணி நேரம் ஊற வைத்து, பின்பு நட வேண்டும்.
வளர்க்கும் பைகளில் 2 பங்கு செம்மண் (அல்லது) வளமான மண், ஒரு பங்கு மண்புழு உரம், ஒரு பங்கு தேங்காய் நார் கழிவு, சூடோமோனாஸ்/ டிரைகோடர்மாவிரிடி/ பாஸ்போபாக்டீரியா/வேப்பம் புண்ணாக்கு ஆகியன ஒரு பையிற்கு 10 கிராம் அளவுக்கு கலந்து முக்கால் பாகம் நிரப்ப வேண்டும். பின்பு பைகளின் அடிப்பகுதி நனையும் வரை நீர் ஊற்ற வேண்டும்.
இப்பைகளில் விதைகளை அதன் அளவு போல் ஐந்து மடங்கு ஆழத்தில் அதாவது 1 இன்ச் அல்லது 2 இன்ச் ஆழத்தில் நட வேண்டும். பெரிய விதைகளை (கொடி வகைகள்) படுக்கை வசத்தில் நட வேண்டும்.
விதைகள் முளைக்கும் வரை பூவாளி அல்லது துளையிடப்பட்ட மூடியால் ஆன தண்ணீர் பாட்டிலிலும் நீர் ஊற்றலாம். செடிகளின் தன்மைக்கு ஏற்ப தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் ஊற்ற வேண்டும். காலை 8 மணிக்கு முன்பும் மாலை 5 மணிக்கு பின்பும் மட்டுமே நீர் ஊற்ற வேண்டும்.
செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க குச்சிகளை நடலாம். கொடி வகை செடிகளை நுனியில் நூல்கட்டி பந்தல் அமைத்து ஏற்றி விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம்/ தொழு உரம்/ மக்கு உரம்/ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும், பஞ்சகவ்யாவைஇலைகளின் மேல் தெளித்தும் செடிக்கு தொடர்ந்து ஊட்டம் கொடுப்பது மிக மிக அவசியம்.
பூச்சி, நோய் தாக்குதலை தடுக்க வேப்ப எண்ணெய் 5 ml அதனோடு புங்க எண்ணெய் 5ml மற்றும் காதிசோப் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி தாக்குதலை தடுக்க மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை அல்லது எண்ணெய் தடவிய மஞ்சள் காகிதத்தை தோட்டத்தின் நடுவில் தொங்க விட வேண்டும்.
இந்த மாடித்தோட்டம் தொடங்க அதிக பணம் செலவாகும் என்று பயப்பட வேண்டாம், நம்மிடம் ஆர்வம் இருந்தால் போதும், நம்மிடம் உள்ள பணத்தை வைத்து மிக எளிமையாக, அதற்கேற்ப பண்ணலாம்.
வீட்டை அலங்கரிக்க நினைப்போர், தனிமையிலிருந்து தவிப்போர், வேளாண் மீது ஆர்வம் இருந்து நிலம் இல்லாமல் தவிப்போர் போன்றவர்களுக்கு இந்தமாடித்தோட்டம் என்பது அவர்கள் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை கட்டாயம் கொடுக்கும்.
மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தால் செடியின் வேர் தரையில் ஊடுருவுமா?’’ செடிக்கு தண்ணீர் விடுவதால் கட்டிடத்திற்கு பாதிப்பு வருமா? என அனைவரும் கேட்கின்றனர்.
காய்கறி செடி வேர்கள் கட்டிடத்தில் பெரும்பாலும் ஊடுருவாது. பாலித்தீன் கவர்களில் செடிகளை வைத்திருக்கிறீர்கள் என்றால் செடி வளர வளர வேர் அந்த கவரை கிழித்துக் கொண்டு வெளியே வரும். அது போன்ற சமயங்களில் வேறு பெரிய கவர் அல்லது தொட்டியில் செடியை மாற்றிக்கொள்ளலாம். என்றாலும் அவ்வப்போது கண்காணிப்பதும் நல்லது.செடிகளுக்கு விடும் தண்ணீர் கட்டிடத்தில் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டிகளுக்கு அடியில் பாலிதீன் விரிப்புகளை பயன்படுத்தலாம். பராமரிப்பு சரியாக இருந்தால் கட்டிடத்திற்குஎவ்வித பாதிப்பும் வராது.
எனவே மாடிதோட்டம் அமைத்தால் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை உணரலாம்….






