கட்டிட பொறியாளர்கள் மற்றும் கட்டுமான துறை சார்ந்த தொழிலாளர்களை இணைத்து சமூக நல சிந்தனையுடன் மூத்த பொறியாளர் பெரு.கணபதி அவர்களின் தலைமையில் உருவானது சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு (CAT) .
நமது நிருபருக்கு சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சங்கத்தின் தலைவர் பெரு.கணபதி கூறியது:
தமிழகத்தில் மாவட்டம்தோறும் கட்டிடப் பொறியாளர்கள் சிறுசிறு அமைப்புகளாக இயங்கி வந்தனர். இதனால் அவை வலுவானதாக இல்லாமல் கட்டிடப் பொறியாளர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் கட்டிடப் பொறியாளர்களுக்கு வலுவான சங்கம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் ஒரே பெயர் கொண்ட சங்கமாக தமிழ்நாடு கட்டிடப் பொறியாளர்கள் சங்கம் (CIVIL ENGINEERS ASSOCIATION OF TAMILNADU) 2019-ல் உருவானது.
சங்கத்தின் முக்கிய கொள்கையாக அனைவருக்கும் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு வழங்குதல், தொழில் பாதுகாப்பு அளித்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுத்தி வருகிறோம்.
எங்கள் சங்க உறுப்பினர்கள் பலர் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். மேலும் கொள்முதல் விலைக்கே கட்டுமான பொருட்களை பெறும் விதமாக அவர்களுக்கு புதிய செயலி (BIM) உருவாக்கி கொடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த விலையில் கட்டுமான பொருட்கள் வழங்க “கட்டுமான பொருட்கள் அங்காடி” வரும் ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சிவில் இன்ஜினியர்கள் ஒன்றிணைந்து செயல்பட இது பாலமாக இருக்கும். இதில் நமது சங்க உறுப்பினர்கள் அதிகம் பேர் பயன் பெறுவர்.
மேலும் நமது சங்க உறுப்பினர்களுக்கு கட்டிட தொழிலில் ஏதேனும் பிரசினைகள் வருமாயின் சங்கம் மூலம் சில சட்ட உதவிகளும் செய்து கொடுத்துள்ளோம். மேலும் சட்ட நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தன் மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு பொறியாளர்களும் எங்கள் சங்கத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று தன் பேட்டியை நிறைவு செய்தார்.
– செய்தியாளர் மாறா.