தமிழ்நாட்டில் 99% பொறியாளர்கள் வீடு மற்றும் கட்டிடத்தின் இறுதி பில் பெறுவதில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்..
99% வீடு / கட்டிட உரிமையாளர்கள் இறுதிப் பில்லை கொடுக்காமல் தவிர்க்கவே விரும்புகின்றனர். இறுதிப் பில்லை கொடுப்பதற்கு மனமே வருவதில்லை..
இந்த கட்டிடத்தில்
பொறியாளர் பல லட்சங்களை சம்பாதித்து விட்டதாக நினைக்கிறார்கள்..
ஒரு பில்டிங் முடிவடைய ஒரு வருடம் ஆகிறது.. பிரித்துப் பார்த்தால் சம்பளம் கூட வராது..
பொறியாளர்களுக்கும் மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள், என்பதைப் பற்றி பெரும்பாலான வீடு மற்றும் கட்டிட உரிமையாளர்கள் கவலைப்படுவதே இல்லை..
எனினும், கட்டிட /வீடு உரிமையாளர்களிடையே பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க, வழிமுறைகள் பின்பற்றலாம்..
1. முதலில் சதுர அடி என்ற அளவில் கட்டிட / வீடு பணிகளை மேற்கொள்ளாதீர்கள்..
2. ஐட்டம் ரேட் என்னும் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுங்கள்.ஒவ்வொரு புதிய வேலைக்கும், காலத்திற்கு ஏற்ப விலையேற்றத்திற்கு ஏற்ப ஐட்டம் ரேட் மாறிக்கொண்டே வரும். இதனால் உங்களுக்கு பெரிய அளவில் நட்டம் வராது..
3. வேலை வேண்டும் என்பதற்காக, குறைவான தொகையில் ஒப்பந்தத்தை மேற்கொள்ளாதீர்கள்.. இறுதியில் இப்படித்தான் ஆகும்..
4. குறைவான ரேட்டில் தானே வேலை செய்கிறோம், அதனால் தரத்தில் கவனம் இல்லாமல் இருந்து விடாதீர்கள்.. கட்டிடம் கட்டும் பொழுது அது காட்டிக் கொடுத்து விடும்.. அடுத்த பில் கூட வாங்க முடியாமல் போய்விடலாம்..

5.. நம்முடைய கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியில் இருக்கும், வேலைகளை எடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசனை செய்யுங்கள்..
6.. தினந்தோறும் வீடு/ கட்டிடம் நடைபெறும் இடத்திற்கு உங்களால் சென்று வர முடியுமா..? என்று பார்த்து ஒப்பந்தத்தை மேற்கொள்ளுங்கள்..

7. உங்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே, திருத்தமான தெளிவான, நிபந்தனைகளை எழுதி, வேலை செய்யுங்கள்..
8. உங்களுக்கும் வீடு/ கட்டிட உரிமையாளருக்கும் இடையே உண்டான அனைத்து, உரையாடல்களையும் e mail மூலமாக பதிவு செய்யுங்கள்.
வாட்ஸ் அப்பில் பேசுவதென்றால் அவற்றையும் கணினியில் பதிவு செய்து வையுங்கள்..
9.. வீட்டு உரிமையாளரிடமிருந்து பெறப்படும் அனைத்து தொகைகளையும், வங்கி மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ளுங்கள்.

10. பில்டிங் ஆரம்பிப்பதற்கு, பேஸ்மெண்ட் வரை உண்டாகும் செலவுக்கு பாதி பணம் கூட வீட்டு உரிமையாளர் கொடுக்க மாட்டார். ” நீங்கள் போட்டு செய்யுங்கள் லோன் வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம்..” என்று கூறுவார்.. வேலை வேண்டும் என்பதற்காக நிச்சயம் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்.. . அவர் வீடு கட்டுவதற்கு அவர்தான் மூலதனம் கொண்டுவர வேண்டுமே தவிர பொறியாளர் அல்ல. அவரே ரிஸ்க் எடுக்க தயங்கும்போது நீங்கள் எதற்காக ரிஸ்க் எடுக்கிறீர்கள்..? இப்படி செய்தால், உங்களிடம் பணம் இருக்கிறது என்று எண்ணி, இறுதி bill ai கொடுக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் சொல்வார்..
11. ஒருவர் ஒரு வீடு கட்டுகிறார் என்றால் அவருடைய, பொருளாதார வசதியை, தெரிந்து கொள்ளுங்கள். அவருடைய IT & வங்கிப் பரிவர்த்தனைகளை நன்கு ஆராயுங்கள்.
பொருளாதார தகுதியே இல்லாமல் அவர் தன்னுடைய சோர்ஸ, தகுதிக்கு மீறி அந்த வீட்டை / கட்டிடத்தை கட்டுவார், அவரால் இறுதிக் கட்டத்தில் பணத்தை புரட்ட முடியாது, பொறியாளர் தலையில்தான் கை வைப்பார்..இதை கவனமாக புரிந்து கொள்ளுங்கள்.

“வேலையை தொடங்குங்கள், எங்களுக்கு ஊரிலே ஒரு இடம் இருக்கிறது, அந்த இடத்தை விற்று பணத்தை கொண்டு வந்து விடுகிறேன்..” என்று கூறினால், யோசித்து செயல்படுங்கள்.
அந்த மனை உடனடியாக விற்கக் முடியாமல் போகலாம். பணம் வர லேட்டாகும், வீட்டுப் பணி பாதிக்கும், மீண்டும் பிரச்சினை பொறியாளர் தலையில் விடியும்.
12. ஒப்பந்தத்தில் எப்பொழுதெல்லாம், எந்தெந்த ஸ்டேஜ்களில், வீடு/கட்டிட உரிமையாளர் பொறியாளருக்கு, எத்தனை பணம் தர வேண்டும் என்பதை தெளிவாக, எழுதிக் கொள்ளுங்கள்.. குறிப்பிட்ட தேதியில் பணம் தரவில்லை என்றால், அடுத்த நாள் வேலையை நிறுத்தி விடுங்கள், அதை முன்கூட்டியே வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்து விடுங்கள். இமெயில் whatsapp மூலமும் பதிவு செய்து கொள்ளுங்கள்.

13. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள வேலைகளைத் தவிர வேறு ஒரு வேலை என்றாலும், அதை e mail மற்றும் வாட்சப், மூலம் “என்ன செலவாகும்..” என்பதை வீட்டுக்காரருக்கு அனுப்புங்கள்.. அதற்கு ஒப்புதல் அதே வழியில் அவர் கொடுத்தால் மட்டுமே அதை மேற்கொள்ளுங்கள்..இல்லையென்றால் அதை மேற்கொள்ளாதீர்கள்..
14. . இறுதிப் பில்லை கொடுக்காமல், அந்த வீட்டில் குடியேற முற்படுவார் வீட்டு உரிமையாளர்.. அதை தவிர்க்க முடியாது.. அதை தவிர்க்க வேண்டும் என்றால் சில முக்கியமான பணிகளை மேற்கொள்ளாமல் ஒத்தி வையுங்கள்..
15. இந்தந்த வேலைகள்,இறுதி பில் கொடுத்ததற்கு பிறகு 10 நாட்கள்-15 நாட்களுக்குள் செய்து தருவதாக உடன்படிக்கை ஒப்பந்தத்தில் பதிவு செய்யுங்கள்.
16.. இறுதி பில்லுக்காக. சட்டப் போராட்டத்திற்கு செல்வது என்றால், அடுத்த வேலை உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் அதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..
வீட்டு உரிமையாளர் உங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில், அல்லது அக்கம்பக்கங்களில், குறை கூறினால், அடுத்தவேலே கிடைப்பது கடினம்..

17. ஒப்பந்தம் போடும் பொழுது, மழை, வெயில் பண்டிகை கால விடுமுறைகளை கணக்கிட்டு, கட்டிட பணிக்கான காலக்கெடுவை இறுதிச் செய்யுங்கள்.
18. பொருட்கள் விலையேற்றம் எத்தனை சதவீதம் வரை பொறியாளர் ஏற்றுக் கொள்வார் என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள்..அப்படி அதிகப்படியான விலை ஏற்றம் வரும் பொழுது அந்த பொருளுக்கான அதிகப்படியான தொகை உடனே வீட்டுக்காரரிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.. அதையும் பதிவு செய்து கொள்ளுங்கள்..
19. கட்டிட பொருட்களைகண்டிப்பாக, ஆத்ரைஸ்ட் ஏஜென்சியில் டெஸ்ட் செய்யுங்கள், அவ்வாறு டெஸ்ட் செல்லும் பொழுது, வீடு கட்டிட உரிமையாளரையும் அழைத்துச் செல்லுங்கள்..
20. ஏதாவது ஒரு சூழ்நிலையில் மழைக்காலங்களில், அல்லது வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் நல்லது கெட்டது, உட்பட ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிரு நாட்களுக்கு மேல் வேலை நின்று விட்டால், அதை ஒரு e mail மூலம் வீட்டுக்காரருடன் பதிவு செய்து கொள்ளுங்கள்.. இமெயில் whatsapp இரண்டும் மேற்கொள்ள முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஒரு நோட்டில் இருவரும் எழுதி கையெழுத்து போட்டுக் கொள்ளுங்கள்.. எதிர்காலத்தில் பிரச்சினைகளை வருவதை இது முற்றிலும் தவிர்த்து விடும்..

21. சாயில் டெஸ்ட், sstructural டிராயிங் பிளம்பிங் / சானிட்டரி/ எலக்ட்ரிக்கல், டிராயிங் இல்லாமல், பணிகளை மேற்கொள்ளாதீர்கள்..
22. புட்டிங், லிண்டல், ரூப் கான்கிரீட்டுகள் போடும் முன், ட்ராயிங் படி கம்பி கட்டி பட்டுள்ளதை, வீட்டு உரிமையாளருடன் சேர்ந்து, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.. புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்..
23. வீடு / கட்டிட உரிமையாளர் கட்டிட பணியை பார்வையிட வரும் பொழுது, நாள் நேரத்துடன் கூடிய, புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
24. . ஒரு வேலையை மேற்கொண்டிருக்கும் பொழுது பாதிக்கு மேல் வேலை முடியும் பொழுது, வீடு / கட்டிட உரிமையாளர், ” எனது உறவினரின் வீடு ஒன்று கட்டித் தருகிறீர்களா என்று கேட்பார்..? ” இதற்கு பதிலளிக்கும் முன் யோசனை செய்து கொள்ளுங்கள்.. இறுதிப் பில்லை கொடுக்காமல் இருக்க உங்களுக்கு விரிக்கும் வலை அது.. சிக்கிக் கொள்ளாதீர்கள்.

25. எல்லாவற்றிற்கும் மேலாக, பொறியாளர் வீடு கட்டுபவர் இடையான உறவு, தொழில் ரீதியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, கட்டிட உரிமையாளர் வீட்டில், காபி சாப்பிடுவதை கூட தவிர்த்து விடுங்கள். அந்த அளவுக்கு உண்டான உறவே போதுமானது.
அதற்கு மேல் நீடித்தால், வீட்டு உரிமையாளரிடம் இறுதி பில் பெறவே முடியாது..
செய்தி
Er.Jegan – Coimbatore







